பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவத் தளபதி மணிப்பூருக்கு வருகை தருகிறார்
Posted On:
27 MAY 2023 1:55PM by PIB Chennai
ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2023 மே 27 & 28 ஆகிய தேதிகளில் மணிப்பூருக்குச் செல்கிறார். அங்கு அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று உள்ளூர் உருவாக்கத் தளபதிகளுடன் உரையாடுவார். கள நிலைமையைப் பற்றிய தகவல்களை பெறுவார். ராணுவ வீரர்களுடனும் அவர் உரையாடுவார்.
28 மே 2023 அன்று, மணிப்பூர் மாண்பமை ஆளுநர் திருமதி அனுசுயா உய்கே, முதல்வர் திரு. என்.பிரேன் சிங் மற்றும் மணிப்பூரின் தலைமை பாதுகாப்பு ஆலோசகர் திரு. குல்தீப் சிங் ஆகியோரை சந்தித்து எதிர்காலப் பாதை, மாநிலத்தில் இயல்பு நிலையை விரைவில் மீட்டெடுக்கும் வகையில் தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவார்.
மணிப்பூரில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழலின் காரணமாக மாநில நிர்வாகம் 03 மே 2023 அன்று ராணுவம் மற்றும் அஸ்ஸாம் துப்பாக்கிப் படையினரின் உதவியைக் கோரியது. உடனடியாக, ராணுவமும் அஸ்ஸாம் துப்பாக்கிப் படைகளும் 135 வரிசைகளில், பதற்றமான மற்றும் விளிம்புநிலைப் பகுதிகளில் தீவிர நடவடிக்கைகள் மூலம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. சுமார் 35,000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இடம்பெயர்ந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன.
***
AP/CJL/DL
(Release ID: 1927764)
Visitor Counter : 190