குடியரசுத் தலைவர் செயலகம்

ராஞ்சி ஐ.ஐ.ஐ.டி-யின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

Posted On: 25 MAY 2023 7:13PM by PIB Chennai

ராஞ்சியில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.

                 

இந்தியா, தனது புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தியும், தற்சார்பை ஊக்குவித்தும், தொழில்முனைவு கலாச்சாரத்தை நோக்கி முன்னேறி வருவதாக விழாவில் பேசுகையில் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். இந்த வகையில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி வாயிலாகத்தான் புதிய நடைமுறைகள், பொருட்கள் மற்றும் வடிவமைப்புகளை உருவாக்க முடியும். தொழில்நுட்பத்தை சமூக நீதியின் கருவியாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய தொழில்நுட்ப புத்தொழில் சூழலியல் இந்தியாவில் நிலவுவதாக குடியரசுத்தலைவர் பெருமிதம் தெரிவித்தார். திறன் வாய்ந்த கருவிகளை நாம் ஏற்கனவே பயன்படுத்தி வந்த போதும் இது போன்ற உபகரணங்களை சாமானிய மக்களுக்கும் கிடைக்கச் செய்து ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கு இணங்க செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இங்குதான் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்கு மிகவும் சவாலானதாகிறது. இதற்கு தங்களது சிந்தனையிலும்,  பணியிலும் முழுமையான அணுகுமுறையை அவர்கள் பின்பற்ற வேண்டும்.

 

நாட்டையும், சமூகத்தையும் மாற்றும் அபரிமிதமான திறன் நமது இளைஞர்களிடையே இருப்பதாக திருமதி திரௌபதி முர்மு குறிப்பிட்டார். வளர்ந்த மற்றும் உணர்வுப் பூர்வமான நாட்டை உருவாக்குவதில் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பங்களிக்கலாம். சமூகம் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக இளைஞர்கள் பணியாற்ற அவர்களுக்கு சரியான பாதையைக் காட்டி ஊக்குவிப்பது நமது கடமை. எதிர்வரும் சவால்களை சமாளிக்க தொழில்துறை மற்றும் மாணவர்களை தயார்படுத்துவதில் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ராஞ்சி இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகம் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

 

(Release ID: 1927304)

AD/RB/KRS

******(Release ID: 1927432) Visitor Counter : 93


Read this release in: English , Urdu , Hindi