பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதிமுர்மு 2023 மே 25ம் தேதியன்று ஜார்க்கண்டின் குந்தி பகுதியில் மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் உரையாடவுள்ளார்.

Posted On: 24 MAY 2023 5:56PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு மத்திய பழங்குடியினர் விவகாரங்கள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுடன் உரையாடவுள்ளார். இந்த நிகழ்வில் 2023 மே 25-ம் தேதியன்று ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள பிர்சா முண்டா கல்லூரி மைதானத்தில் நடைபெறும். இந்த நிகழ்வில், மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.அர்ஜுன் முண்டா, ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு.ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, பல்வேறு பழங்குடியினரின் கைவினைப்பொருட்கள் மற்றும் அதன் நேரடி செயல் விளக்கங்களை காட்சிப்படுத்தும் சாவடிகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பழங்குடியினர் தயாரிப்புகளின் கைவினைப் பொருட்கள் காட்சி: இந்தக் கண்காட்சிக்காக 20 அரங்குகள் ஒதுக்கப்படவுள்ளன. இதில் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.

கைவினை செயல்விளக்கம்: ஜவுளி நெசவு, மூங்கில் கூடை, யோகா பாய் தயாரித்தல், இசைக்கருவிகள் தயாரித்தல் போன்றவற்றுக்கு செயல்முறை விளக்கக் கண்காட்சி ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்காக, பழங்குடியின சமூகத்தினரிடையே பரவலாக உள்ள நோய்களையும், ஊட்டச்சத்துக் குறைபாடு, காசநோய் போன்ற வாழ்க்கை முறை நோய்களையும் கண்டறியும் நோக்கத்திற்காக சுகாதார மையம் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வை முன்னிட்டு மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சர், திரு.அர்ஜுன் முண்டா, ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்களுடனான உரையாடலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு அரங்குகளைப் பார்வையிடுவார். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Release ID: 1926978)

******



(Release ID: 1927024) Visitor Counter : 124


Read this release in: English , Urdu , Hindi