ஜவுளித்துறை அமைச்சகம்
பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் (PM MITRA) பூங்கா அமைக்க 21 மே 2023 அன்று தார் கிராமத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
Posted On:
20 MAY 2023 2:17PM by PIB Chennai
பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் (PM MITRA) பூங்காவை மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், பத்னாவர் தெஹ்சில், பென்சோலா கிராமத்தில் அமைப்பதற்கான முன்மொழிவுக்கு மார்ச் 2023 இல் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலத்தின் தார் மாவட்டத்தில் 21.05.2023 அன்று நடைபெறுகிறது. இதில் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக துறைக்கான மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திருமதி. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 150 முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, ஆடை உற்பத்தித் துறையில் மத்தியப் பிரதேசம் ஒரு கவர்ச்சிகரமான சந்தையாக உருவெடுத்துள்ளது. 2003ல் 11 ஆக இருந்த ஆடை உற்பத்தி அலகுகள் தற்போது 53 ஆக உயர்ந்துள்ளன.
பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடைகள் (PM MITRA) திட்டத்தின் கீழ் ஏழு மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. மத்திய பிரதேசம் தவிர, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
***
AD/CJL/DL
(Release ID: 1925881)
Visitor Counter : 177