விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பிரதேச மாநிலம் பாலகாட்டில் நாளை உலக தேனீ தினத்தை முன்னிட்டு தேசியஅளவிலான நிகழ்ச்சி நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 19 MAY 2023 3:47PM by PIB Chennai

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மத்தியப் பிரதேசத்தின் பாலகாட்டில் உள்ள வாரசிவ்னியில் உள்ள ராஜா போஜ் விவசாயக் கல்லூரியில் உலக தேனீ தினத்தை நாளை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் பங்கேற்கிறார்.

1000 விவசாயிகள்/ தேனீ வளர்ப்பவர்கள் மற்றும் தேன் உற்பத்தியுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தேனீ வளர்ப்புத்துறையுடன் தொடர்புடையவர்களால் 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

விவசாயிகள்/தேனீ வளர்ப்பவர்களிடையே தேனீ வளர்ப்பு பற்றிய அறிவியல் அறிவை மேம்படுத்துவதற்காக, "உற்பத்தி, ஆராய்ச்சி,  ஏற்றுமதிக்கான சந்தை உத்தி" மற்றும் "சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள்’’ குறித்த தொழில்நுட்ப அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து, மத்திய அரசு "தேசிய தேனீ வளர்ப்பு மற்றும் தேன் இயக்கம்" என்ற திட்டம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது. தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கவும், "இனிப்புப் புரட்சி" என்ற இலக்கை அடைவதற்காகவும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேனீ வளர்ப்பு என்பது ஒரு முக்கியமான வேளாண் வணிகச் செயலாகும். இது விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை அளிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு வழிவகுக்குகிறது.

******

AD/CR/KRS


(रिलीज़ आईडी: 1925620) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी