சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

தேசிய அளவிலான ஓய்வூதிய குறை தீர்வு மன்றம்

Posted On: 19 MAY 2023 7:47PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள தகவல் தொடர்பு கணக்கு பொது கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் அறிவுறுத்தல்களின்படி, தமிழகத்தைச் சேர்ந்த DoT மற்றும் BSNL ஓய்வூதியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான தேசிய அளவிலான ஓய்வூதிய குறை தீர்வு மன்றம், 17.05.2023 அன்று காலை 1030 மணி முதல் பிற்பகல் 1300 மணி வரை, நிகழ்நிலை பயன்முறை மூலம், சென்னை - 600 008, எத்திராஜ் சாலை, டிஎன்டி வளாகத்தின் 3வது மாடியில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த மெய்நிகர் கூட்டத்தை புது தில்லியில் உள்ள தகவல் தொடர்பு கணக்கு பொது கட்டுப்பாட்டாளர் அவர்கள் தொடக்கி வைத்தார். தகவல் தொடர்பு கணக்கு பொது கட்டுப்பாட்டாளர், தனது தொடக்க உரையில், ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க அவர்களின் குறைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்தினார். தொடக்க உரைக்குப் பிறகு, காலை 11.00 மணிக்கு வட்ட அளவிலான குறை தீர்வு மன்றம் தொடங்கியது.

தமிழ்நாடு வட்டம், தகவல் தொடர்பு கணக்கு முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலக ஓய்வூதிய குறை தீர்வு மன்றத்தை தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர், திரு சித்தரஞ்சன் பிரதான், அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். இந்த மன்றத்தில் தகவல் தொடர்பு கணக்கு இணைக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), திருமதி K. கௌதமி பாலஸ்ரீ, தகவல் தொடர்பு கணக்கு இணைக் கட்டுப்பாட்டாளர் (PVA/PDA), திருமதி T. ரூபிகா, தகவல் தொடர்பு கணக்கு துணைக் கட்டுப்பாட்டாளர் (PDA), திரு சஞ்சித் குமார், தகவல் தொடர்பு கணக்கு துணைக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), திரு ஏ.ஜி.மணி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மன்றத்தில், ஓய்வூதியர் சங்கங்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட ஓய்வூதியதாரர்கள், BSNL பிரிவுகள், ஓய்வூதியம் வழங்கும் வங்கி CPPC களின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு வட்டத்தின் பொது மேலாளர் அலுவலகம் (அஞ்சல் கணக்குகள் மற்றும் நிதி) அதிகாரிகள் உட்பட, மொத்தம் 56 பேர் பங்கேற்றனர்.

திரு ஏ.ஜி.மணி, தகவல் தொடர்பு கணக்கு துணைக் கட்டுப்பாட்டாளர் (ஓய்வூதியம்), தனிப்பட்ட ஓய்வூதியதாரர்களின் குறைகளை ஒவ்வொன்றாக, ஓய்வூதியதாரர்கள் திருப்திப்படுத்தும் வகையில் தீர்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவித்தார்.

ஓய்வூதிய குறை தீர்வு மன்றத்தில் மொத்தம் 91 எண்ணிக்கையிலான புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அனைத்து 91 குறைகளும் தீர்க்கப்பட்டுள்ளன, அதாவது பெறப்பட்ட குறைகளில் 100% தீர்வு காணப்பட்டது.

***

 

 



(Release ID: 1925611) Visitor Counter : 237


Read this release in: English