நிலக்கரி அமைச்சகம்
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 47% வளர்ச்சியடைந்து சாதனை
Posted On:
19 MAY 2023 4:37PM by PIB Chennai
கடந்த ஒன்பது ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 47% அதிகரித்து 893.08 மில்லியன் டன்னாக உள்ளது. அதேபோல், நிலக்கரி விநியோகம் 877.74 மில்லியன் டன்னாக அதிகரித்து 45.37 சதவீதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2023-24-ம் நிதியாண்டுக்கான நிலக்கரி உற்பத்தி 893.08 மில்லியன் டன்னை எட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதே நேரத்தில் மத்திய நிலக்கரி அமைச்சகம், 2023-24-ம் நிதியாண்டுக்கான அதிரடி உற்பத்தித் திட்டத்தை அண்மையில் இறுதிசெய்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான நிலக்கரி உற்பத்தி இலக்கு 1,012 மில்லியன் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு இந்த இலக்கை அடைய வழிவகுக்கப்பட்டுள்ளது.
2022-23ம் நிதியாண்டில், மொத்தமாக 23 நிலக்கரிச் சுரங்கங்கள் வாயிலாக ஆண்டிற்கு 33.224 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்வதற்காக மத்திய நிலக்கரி அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. வர்த்தக நிலக்கரி சுரங்கங்களுக்கான ஆறாவது சுற்று ஏலத்தில் கிடைத்த அமோக வரவேற்பைக் கருத்தில் கொண்டு 2023-24-ம் நிதியாண்டில் 25 நிலக்கரிச் சுரங்கங்களுக்கு வணிக ரீதியிலான சுரங்கப் பணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
******
AD/ES/RS/KRS
(Release ID: 1925568)