பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய பாதுகாப்பு செயலாளர், அமெரிக்க பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் தலைமையில் வாஷிங்டன் டி.சி.யில் இந்திய- அமெரிக்க பாதுகாப்பு கொள்கை குழுவின் 17-வது கூட்டம்
Posted On:
17 MAY 2023 10:04PM by PIB Chennai
பாதுகாப்புச் செயலாளர் திரு கிரிதர் அரமனே மற்றும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் கொள்கைக் துறை துணைச் செயலாளர் டாக்டர் கோலின் கால் ஆகியோர் தலைமையில் இந்திய- அமெரிக்க பாதுகாப்பு கொள்கை குழுவின் 17-வது கூட்டம் வாஷிங்டன் டி.சி.யில் மே 17-ஆம் தேதி நடைபெற்றது. பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இந்திய- அமெரிக்க முக்கியப் பாதுகாப்பு கூட்டுமுயற்சியை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான பணிகளையும் இருவரும் ஆய்வு செய்தனர். இரு நாடுகளின் ராணுவத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு, அடிப்படை பாதுகாப்பு ஒப்பந்தங்களின் அமலாக்கம், பயிற்சிகள் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கூட்டுமுயற்சி, நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பாதுகாப்பு விநியோக சங்கிலியின் வளர்ச்சி உள்ளிட்ட பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வழிமுறைகளுக்கு கூட்டத்தின் போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தியாவும், அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றும் திட்டங்களை இந்தியாவில் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. புத்தாக்க சூழலியலை பயன்படுத்தி பாதுகாப்புத் துறையில் புத்தொழில் நிறுவனங்களை அரசு- தனியார் கூட்டுமுயற்சியில் தொடங்குவதை ஊக்குவிப்பதற்கு இருவரும் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1925015
(Release ID: 1925015)
******
AP/RB/KRS
(Release ID: 1925156)
Visitor Counter : 176