வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இந்தியாவில் 2023 ஏப்ரல் மாதத்திற்கான மொத்த விற்பனை விலையின் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)
प्रविष्टि तिथि:
15 MAY 2023 12:01PM by PIB Chennai
2023 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் மொத்த விற்பனை விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் ஆண்டு பணவீக்க விகிதம் (-) 0.92% (தற்காலிகமானது) ஆகும். இது 2023 மார்ச் மாதத்தில் 1.34%-ஆகப் பதிவானது. 2023 ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் குறைவதற்கு உணவுப் பொருட்கள், ஜவுளி, உணவு அல்லாத பொருட்கள், இரசாயனப் பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம் மற்றும் காகிதப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்ததே காரணமாகும்.
மொத்த விற்பனை விலைக் குறியீட்டு எண் முந்தைய மாதத்துடன் ஒப்பீடு;
முதன்மைப் பொருட்கள்;
இந்த முக்கிய அட்டவணையில் உள்ள பொருட்களின் மொத்த விற்பனை விலையின் குறியீட்டு எண் கடந்த மாதத்தை விட 1.31% அதிகரித்து 177.3 ஆக (தற்காலிகமானது) உள்ளது. இது 2023 மார்ச் மாதத்தில் 175.0-ஆக (தற்காலிக) இருந்தது.
எரிபொருள் மற்றும் ஆற்றல் :-
இந்த அட்டவணையிலுள்ள பொருட்களின் குறியீட்டு எண் 2023 ஏப்ரல் மாதத்தில் 2.68% குறைந்து 152.6-ஆகப் (தற்காலிகமானது) பதிவானது. இது 2023 மார்ச் மாதத்தில் 156.8-ஆக இருந்தது.
உற்பத்தி செய்யப்பட்ட தயாரிப்புகள்;-
இந்த அட்டவணையிலுள்ள பொருட்களின் குறியீட்டு எண் 2023 ஏப்ரலில், 141.2-ஆக உள்ளது.
******
AP/CR/KPG
(रिलीज़ आईडी: 1924254)
आगंतुक पटल : 314