பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சகத்தின் உற்பத்தித் துறை தர உத்தரவாதக் கட்டணங்களை தள்ளுபடி செய்கிறது

Posted On: 10 MAY 2023 5:09PM by PIB Chennai

சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்குமான முக்கிய  நடவடிக்கையாக, பாதுகாப்பு உற்பத்தித் துறையானது அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் தர உத்தரவாதக் கட்டணங்களை (QA) தள்ளுபடி செய்துள்ளது. இந்த முயற்சியானது, பாதுகாப்புத் தளவாடங்களின் மதிப்பை உலக சந்தையுடன் போட்டியிட வைக்கும்.

சர்வதேச சந்தையில் இந்திய பாதுகாப்பு தயாரிப்புகளை அதிக போட்டித்தன்மையுடன் உருவாக்க, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பல்வேறு  நிறுவனங்கள் மூலம் தொழில்துறையினருக்கு அவர்களின் தயாரிப்புகளை சோதனை செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த சோதனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  நிலையான விகிதங்களின்படி  கட்டணங்கள் விதிக்கின்றன. இந்த கட்டணம் பொருட்களின் தயாரிப்பு விலையில் சேர்கிறது. இதனால், சர்வதேச சந்தையில் போட்டியிட முடியாத சூழல் நிலவியது. ஆனால் தற்போது இந்தக் குற்றச்சாட்டுகள் இல்லாமல் போய்விடும்.

----

AD/CR/KPG

 

 (Release ID: 1923182) Visitor Counter : 153


Read this release in: English , Urdu , Hindi , Marathi