பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு விருதுகள் வழங்கும் விழாவில் வீர, தீரச்செயல்களுக்கான 37 விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 MAY 2023 7:29PM by PIB Chennai

ஆயுதப்படைகளின் சுப்ரீம் கமாண்டரான குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, வீர, தீரச்செயல்களுக்கான 37 விருதுகளை இன்று வழங்கினார். பாதுகாப்பு விருதுகள் வழங்கும் முதல்கட்ட விழாவில் அவர் இந்த விருதுகளை வழங்கினார்.

ஆயுதப்படைகள், மத்திய ஆயுதப்படைகள் மற்றும் மாநில/யூனியன் பிரதேசத்தின் காவல்துறையினருக்கு  இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.  துணிச்சல், தைரியம் மற்றும் கடமையில் அதீத பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தியதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.  மரணத்திற்குப் பிந்தைய ஐந்து விருதுகள் உட்பட எட்டு கீர்த்திச் சக்ரா விருதுகளும்,  மரணத்திற்குப் பிந்தைய ஐந்து விருதுகள்  உட்பட 29 சௌர்ய சக்கரா விருதுகளும் இன்று வழங்கப்பட்டன.

***

AD/PKV/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1922919) வருகையாளர் எண்ணிக்கை : 252
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi