நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார்

Posted On: 08 MAY 2023 6:19PM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற நிதி நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 27-வது கூட்டத்திற்கு, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். 2023-24-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பொது மக்களின் பொருளாதார நிலை சிறப்பாக அமையவும் அவர்களின் நிதித் தேவைகளை சரியான முறையில் அணுகவும்  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், நிதித் துறை நிலைப்புத் தன்மையை உறுதி செய்வதற்கு முறைப்படுத்துதல் அமைப்புகள், தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இணக்கச் சுமைகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், திறன்மிக்க முறைப்படுத்துதல் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  நிதித்துறையில் பெருமளவில் இணையதள சேவைகள் பயன்பாட்டில் இருப்பதால் இணையம் வாயிலான பரிமாற்றப் பாதுகாப்பு முறைகள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் தயார் நிலை ஆகியவை சிறப்பான முறையில் செயல்படும் வகையில் இந்திய  நிதித்துறை அமைப்பின் நிலைப்புத்தன்மையையும் உறுதிப்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நிதித்துறையில், கேட்பாரற்று கிடக்கும் வைப்புத்தொகையையும், நிலுவையில் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கும் வகையில், சிறப்பு செயல்திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் பொருளாதாரத்தின் மீதான விளைவுகள் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான தயார் நிலை, இணக்கச் சுமைகளைக் குறைத்தல், முறைப்படுத்துதலின் தரத்தை மேம்படுத்துதல், பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன் அளவுகளை முறைப்படுத்துதல், உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் என்ற பொருள்படும் கேஒய்சி விதிமுறைகளை எளிதாக்குதல், அரசு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் தனிநபர்களுக்கு பாதுகாப்பு அளித்தல், காப்பீடுத் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்த்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

-----

 

SM/AP/KPG


(Release ID: 1922591) Visitor Counter : 189


Read this release in: English , Urdu , Marathi , Hindi