குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இங்கிலாந்தில் உள்ள இந்திய சமூகத்தினருடனான சந்திப்பின் போது துணை குடியரசுத்தலைவரின் உரை (பகுதிகள்)
Posted On:
06 MAY 2023 3:38PM by PIB Chennai
நண்பர்களே, இந்த வருகை எனக்கு என்றும் மறக்க முடியாததாக இருக்கும். இது நான் நீண்ட உரையை நிகழ்த்துவதற்கான சந்தர்ப்பம் அல்ல ஆனால் நான் ஒன்றை உறுதியாகச் சொல்வேன்- இந்தியா தனது புலம்பெயர்ந்தோரைப் பற்றி பெருமை கொள்கிறது. அவர்கள் பாரதத்தின் 24 x 7 தூதர்கள் ஆவர். இங்கு 1.7 மில்லியன் மற்றும் உலகம் முழுவதும் 32 மில்லியன் இந்தியர்கள் வாழ்கின்றனர்.
இந்த நேரத்தில் இந்தியா அனைத்து உலகளாவிய நிலைகளிலும் மிகுந்த செயல்பாடு கொண்ட ஒரு சனநாயக நாடு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிர்வாகமானது மனிதகுலத்தின் 1/6 பங்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றியமைத்திருப்பதைக் காணலாம்.
மக்களின் துன்பத்தைப் போக்குவதற்கும், சாமானியர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முன்பு கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத உள்கட்டமைப்பு வளர்ச்சி என்பது இன்றைக்கு அடிப்படை உண்மையாக இருக்கிறது.
இந்தியாவில் 700 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ளனர். இதனால் வெளிப்படைத்தன்மையுடன் பணப் பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன. இதுவரை 110 மில்லியன் விவசாயிகள் வருடத்திற்கு மூன்று முறை பெற்ற ஊக்கத் தொகை ரூ. 2.2 லட்சம் கோடியை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு இளைஞரும் தனது ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிதிக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. முத்ரா கடனுதவித் திட்டம் வேலை கொடுக்கும் இளைஞர்களை உருவாகியுள்ளது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கை உருவாகியுள்ளது.
கிராம அளவில், நகராட்சி மட்டத்தில், மாநில அளவில், மத்திய அளவில், கூட்டுறவு மட்டத்தில் அரசியலமைப்பு பொறிமுறைகளை அரசியலமைப்பு வழங்குகிறது. பாரதத்தில் இவை அனைத்தும் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள வேறு எந்த நாட்டிலும் இத்தகைய ஜனநாயகத்தை நீங்கள் காண முடியுமா?
இந்தியர்களாக நாம் பெருமைப்பட வேண்டும். நமது வரலாற்று சாதனைகளில் பெருமிதம் கொள்ள வேண்டும். உலகில் எந்த நாடு கோவிட் தொற்றுநோயை இவ்வளவு வெற்றிகரமாகச் சமாளித்ததாகக் கூற முடியும்? தடுப்பூசி டோஸ் ஒவ்வொரு இந்தியருக்கும் இலவசமாக, சரியான நேரத்தில், அளவீடு செய்யப்பட்ட முறையில் வழங்கப்பட்டது. அதன் சான்றிதழானது ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எந்தவொரு தேசத்தின் வளர்ச்சிக்கும் அடிப்படையான உள்கட்டமைப்பு வளர்ச்சியைப் பாருங்கள். உலகத் தரம் வாய்ந்த விரைவுப் பாதைகள், மோட்டார் பாதைகள், விமானப் பரப்பு மற்றும் கிராம மட்டம் வரை நிச்சயமாக தொழில்நுட்பம் விரிவாக உள்ளது. ரயில் மார்க்கத்தைப் பொறுத்தவரை, முன்பு ராஜதானிகள் மற்றும் பிற ரயில்கள் இருந்தன, ஆனால் இப்போது வந்தே பாரத் உள்ளது.
இந்தியாவில் இப்போது எந்த கிராமத்திற்குச் சென்றாலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காணலாம். பாஸ்போர்ட் விண்ணப்பிக்க அவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டார்கள். அவர்களின் கிராமத்திலேயே யாராவது அவர்களுக்காக அதைச் செய்வார்கள்.
பாரதம் சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டான “அமிர்த காலம்” முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தின் மாவீரர்களும், அறியப்படாத மாவீரர்களும் அடையாளம் காணப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததன் நூற்றாண்டை கொண்டாடும் போது இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உறுதியான அடித்தளம் போடப்பட்டுள்ளது.
தற்போது ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் மூன்றாவதாக இருப்போம். இந்த சாதனை சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கனவுகளுக்கு அப்பாற்பட்டது. கடுமையாக உழைக்கும் ஒவ்வொரு இந்தியருக்கும், தொழிலாளிக்கும், விவசாயிக்கும், திறமையான அரசாங்கக் கொள்கைகளுக்கும், கொள்கைகளை வெளிப்படையாகவும் பொறுப்புடனும் நேர்மையாகச் செயல்படுத்தியவர்களுக்கும் இந்தப் பெருமை உரியதாகும்.
நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். எனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் ஏனெனில் இது இந்தியப் பிரதமரிடமிருந்து நான் கற்றுக்கொண்டப் பழக்கம். அவர் வாக்குறுதிகளை மிக வேகமாக நிறைவேற்றுவார். தேவைப்படும் வீடுகளுக்கு 170 மில்லியன் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்குவதன் மூலம் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான வீடுகள் ஏழைகளுக்குக் கிடைத்து வருகின்றன, இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பொதுத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு வசதிகள் மிகக் குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
***
AD/CJL/DL
(Release ID: 1922311)
Visitor Counter : 174