குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
வடகிழக்கு மாநிலங்களில் வணிகத்தைப் பெருக்க கொண்டு வரப்பட்ட BIZAMP திட்டம் குறித்து நாகலாந்தின் திமாபூரில் நடைபெற்ற முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Posted On:
04 MAY 2023 4:45PM by PIB Chennai
நாகாலாந்து மாநிலம் திமாபூரில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சக செயலாளர் திரு.பி.பி. ஸ்வைன் தலைமையில், சுயசார்பு இந்தியா (SRI) நிதியின் கீழ், 2023 மே 4-ம் தேதியன்று BizAmp(Amplifying Business) நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதையும், SRI நிதியின் கீழ் உள்ள பலன்களைப் பயன்படுத்தி அவற்றின் வணிகங்களைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு பி பி ஸ்வைன், இத்திட்டம் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்களை ஊக்குவிக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் குறிப்பிட்டார்.
BizAmp நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் வணிகத்தைப் பெருக்கக் கொண்டு வரப்பட்ட முதல் விழிப்புணர்வுத் திட்டமாகும். நமது பொருளாதாரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இளைஞர்களிடையே தொழில் முனைவோரை மேம்படுத்தவும், இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான அமைப்பை உருவாக்கவும் கவனம் செலுத்துவது அவசியம். நாட்டின் பொருளாதார நலனுக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை வளர்ப்பது முக்கியம்.
***
(Release ID: 1922016)
Visitor Counter : 141