அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இளம் மனதில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துதல் நிகழ்ச்சியை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் புராரியில் உள்ள சர்வோதயா வித்யாலயாவில் ஏற்பாடு
Posted On:
04 MAY 2023 4:05PM by PIB Chennai
புது தில்லியின் புராரியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் (சர்வோதயா வித்யாலயா) “அறிவியல்-சமூக இணைப்பு: இளம் மனதில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்துதல்” நிகழ்ச்சியை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்-தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NIScPR) ஏற்பாடு செய்தது.
இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் சிறுவர்களின் மனதுக்குள் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதும், அறிவியல் கல்வியை ஊக்குவிப்பதும் ஆகும்.
திரு.சி பி சிங் (தலைவர், ஜிக்யாசா, பயிற்சி மற்றும் மனிதவள பிரிவு) மாணவர்களை வரவேற்று, CSIR & CSIR-NIScPR குறித்த அறிமுகத்தை வழங்கினார். இதைத் தொடர்ந்து டாக்டர் சுமன் ரே-வின் வினாடி வினாவுடன் “சிஎஸ்ஐஆரின் சாதனைகள்” என்ற தலைப்பில் உரை நடத்தப்பட்டது. மேலும், டாக்டர் சுமன் ரே- வின் வினாடி வினா மூலம் "மருத்துவத் தாவரங்கள்" என்ற தலைப்பில் மூலிகை குறித்த சுகாதார விழிப்புணர்வு செய்யப்பட்டது.
"நீருக்கு கீழே வாழ்க்கை" மற்றும் "விண்வெளிக்கு சென்ற இந்திய விண்வெளி வீரர்கள்" என்ற அனிமேஷன் திரைப்பட நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் அறிவியலை நோக்கி ஈர்க்கப்பட்டனர். தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவன வெளியீடுகளான “விக்யான் பிரகதி”, அறிவியல் நிருபர் மற்றும் “ஆயுர் வாடிகா செய்தித் தொகுப்பு ஆகியவை மாணவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
***
AD/CR/KPG
(Release ID: 1921991)