அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

கண்ணாடி இழை சாமணங்களைப் பயன்படுத்தி மென்மையான கூழ்மப் பொருட்களில் உள்ள துகள்களைக் கண்டறியும் புதிய வழிமுறையை மருந்து உற்பத்தியில் பயன்படுத்தப்படலாம்

Posted On: 04 MAY 2023 12:20PM by PIB Chennai

கண்ணாடி இழையால் ஆன  சாமணங்களைப்  பயன்படுத்தி மென்மையான  கூழ்மங்களுக்குள் நுண்ணிய துகள்களைக் கண்டறியும் வழிமுறையை  விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் -- இதன் பயன்பாடு உயிரியல் அமைப்புகளில் 2018 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைக் கொண்டு வந்தது. துகள்களைக் கண்டறிந்து அவற்றை விரும்பியபடி கையாளும் இந்தப் புதிய வழியை மருந்து உற்பத்தி  போன்றவற்றில்  பயன்படுத்தலாம் என்று அவர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.

கண்ணாடி இழை சாமணங்களைப் பயன்படுத்தி, அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் நிதியளிக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனமான  ராமன் ஆராய்ச்சி நிறுவன  (ஆர்ஆர்ஐ) ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.  லேபோனைட் எனப்படும் மருந்து மற்றும் அழகுசாதனத் தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருளை இதற்கு பயன்படுத்தியுள்ளனர்.

லாபோனைட் வெளிப்படுத்திய  பாலிஸ்டிரீன் மணிகள் சோதனை அமைப்பிற்கு பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில், இந்தத் துகள்களுக்கு இடையிலான மின்னியல் தொடர்புகளின் காரணமாக நுண் கட்டமைப்புகள் உருவாகியதாகக் குறிப்பிடப்பட்டது. இந்த நுண் கட்டமைப்புகள் காலப்போக்கில் வலுப்பெற்றன, அவற்றின் நெட்வொர்க் அளவு லாபோனைட் துகள்களின் செறிவைச் சார்ந்ததாகும்.

 

*****

AD/PKV/KPG


(Release ID: 1921905) Visitor Counter : 147


Read this release in: English , Urdu , Hindi