சுற்றுலா அமைச்சகம்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 வது அத்தியாயத்தைக் கொண்டாட இளைஞர் சுற்றுலா சங்கங்கள் மூலம் “மனதின் குரல் நிகழ்ச்சியில் 100 அத்தியாயங்கள் – 100 நாட்கள் செயல்திட்டம்” என்ற சிறப்பு முன்முயற்சியை சுற்றுலா அமைச்சகம் மேற்கொள்கிறது

Posted On: 29 APR 2023 5:38PM by PIB Chennai

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தை 30.04.2023 அன்று தனது இளைஞர் சுற்றுலா சங்கங்கள் (யுவ டூரிசம் கிளப்) மூலம் ஒலிபரப்பவுள்ளது. மனதின் குரல் உரை நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவ்வப்போது சுற்றுலாவைப் பற்றிக் குறிப்பிட்டு வருகிறார். இதையொட்டி "மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 அத்தியாயங்கள் - 100 நாட்கள் செயல்திட்டம்" என்ற சிறப்பு முயற்சியை சுற்றுலா அமைச்சகம் தொடங்குகிறது.

 

சுற்றுலா அமைச்சகம் இதுவரை 30,000 இளைஞர் சுற்றுலா சங்கங்களை (யுவ டூரிசம் கிளப்) அமைத்துள்ளது. 75வது விடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், இந்தியன் ஹோட்டல் மேலாண்மை (IHM) நிறுவனங்களில் இளைஞர் சுற்றுலா சங்கங்கள் தொடங்கப்பட்டன. இந்திய சுற்றுலாவுக்கான இளம் தூதர்களை வளர்ப்பதும், மேம்படுத்துவதும் இந்த சங்கங்களின் நோக்கமாகும்.  அவர்கள் இந்தியாவில் உள்ள சுற்றுலா வாய்ப்புகளை அறிந்து, நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவித்து, சுற்றுலா மீது ஆர்வத்தை வளர்க்கிறார்கள். இந்த இளம் தூதர்கள் இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு ஊக்க சக்தியாகத் திகழ்வார்கள்.

 

 

மன் கி பாத்தில் பிரதமர் அவ்வப்போது நிலைத்தன்மை குறித்தும் குறிப்பிட்டுள்ளார். எதிர்கால ஹோட்டல் மற்றும் சுற்றுலா மேலாளர்களுக்கு நிலைத்தன்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, அனைத்து இந்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களுக்கும்,(ஐஹெச்எம்) ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் செய்யப்படும் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை வடிவமைப்பதற்கான போட்டி நடத்தப்படுகிறது. மே 1, 2023 முதல், அடுத்த 100 நாட்களில் இளைஞர் சுற்றுலா சங்கங்களின் எண்ணிக்கையை 50,000 ஆக உயர்த்த சுற்றுலா அமைச்சகம் உறுதிபூண்டு, அதற்கான இயக்கத்தையும் சுற்றுலா அமைச்சகம் தொடங்கவுள்ளது.

 

***

AD/PLM/DL



(Release ID: 1920780) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi