சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை விமான நிலையத்தில் கடத்திச் செல்ல முயன்ற வன உயிரினங்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
प्रविष्टि तिथि:
29 APR 2023 6:15PM by PIB Chennai
சென்னை விமான நிலையத்தில் உளவுத்துறையின் தகவலின் படி, 28.04.2023 அன்று ஏர் ஏசியா விமானத்தில் கோலாலம்பூருக்குச் செல்ல வந்த பெண் தனது பையில் 23 வனவிலங்குகளை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதேபோல் 28.04.2023 அன்று ஏர் ஏசியா விமானம் மூலம் கோலாம்பூரில் இருந்து வந்த பயணி ஒருவரை சோதனை செய்த போது 177 கிராம் எடையுள்ள 20 மஞ்சள் நிற உலோகத் தகடுகள் மற்றும் 88 கிராம் எடையுள்ள தங்கம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இத்தனையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மொத்தம், 23 எண்ணிக்கையிலான வனவிலங்குகள், 177 கிராம் எடையுள்ள 20 மஞ்சள் நிற உலோகத் தகடுகள் மற்றும் 88 கிராம் எடையுள்ள இரண்டு தங்கம் சுங்கச் சட்டம், 1962ன் கீழ் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
***
AP/CJL/DL
(रिलीज़ आईडी: 1920772)
आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English