அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

உயிரி மற்றும் உயிரற்றத் தன்மைப் பதிவுகளின் அடிப்படையில் நவீன அனலாக் தரவு தொகுப்பு: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

प्रविष्टि तिथि: 29 APR 2023 12:47PM by PIB Chennai

மத்திய கங்கை சமவெளியின் இரண்டு இடைவெளிகளில் உள்ள ஏரிப் படுகைகள், ஆற்றுப்படுகைகள், பயிர் நிலங்கள் போன்ற பல்வேறு பதிவு அமைப்புகளிலிருந்து உயிரி மற்றும் உயிரற்றத் தன்மைப் பதிவுகளின் அடிப்படையில் நவீன அனலாக் தரவுத் தொகுப்பை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மத்திய கங்கை சமவெளியில் சூழலியல் ஆய்வுகளைத் துல்லியமாக  மேற்கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.

 

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் பீர்பால் சஹ்னி பேலியோசயின்சஸ் நிறுவனத்தின் (பி.எஸ்.ஐ.பி) விஞ்ஞானிகள், மத்திய கங்கை சமவெளியின் காக்ரா- கண்டக் மற்றும் கங்கை-காக்ரா இடைவெளிகளில் உள்ள உயிரி மற்றும் உயிரற்றத் தன்மைப் பதிவுகளின் ஆற்றல் மற்றும் பலவீனங்களை மதிப்பீடு செய்தனர். இரண்டு இடைவெளிகளில் இருந்தும் நவீன அனலாக் தரவு தொகுப்பை உருவாக்குவதற்காக முதன்முறையாக அவர்கள் ஒட்டுமொத்த அணுகுமுறையைப் பின்பற்றினார்கள்.

 

வனப்பகுதிகளில் சமுதாய கட்டமைப்பு, உணவுப் பயிர்கள் மற்றும் மனித இருப்பிடங்களை உருவாக்குவதில் உதவுவதால் உயிரி மற்றும் உயிரற்ற இடையீடுகளின் ஆய்வு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய கங்கை சமவெளியில் நிலையான எதிர்கால திட்டங்களை வகுக்கவும், கடந்த காலத்தை அறிந்து கொள்ளவும் இந்த ஆய்வு ஏதுவாக இருக்கும். கடேனா என்ற சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.

 

***

AP/RB/DL


(रिलीज़ आईडी: 1920728) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी