பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா அந்தமானில் 4 நாட்கள் பயணம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 APR 2023 6:08PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, அந்தமானில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக போர்ட்பிளேரில் உள்ள மண்டல மானுடவியல் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகத்தில் 6 பழங்குடியினரின் வாழ்வியலை சித்தரிக்கும் அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து போர்ட்பிளேர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் திரு அர்ஜுன் முண்டா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய அரசின் நிதி உதவியுடன் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும், ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அங்குள்ள தேசிய நினைவுச் சின்னமான செல்லுலார் சிறையில் உள்ள வீர் சாவார்கர் இருந்த அறையை திரு அர்ஜுன் முண்டா பார்வையிட்டார்.
***
AD/ES/RJ/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1920628)
வருகையாளர் எண்ணிக்கை : 211