விவசாயத்துறை அமைச்சகம்
யூனியன் பிரதேசங்களின் விரிவான வேளாண் வளர்ச்சிக்கான கூட்டத்திற்கு மத்திய வேளாண் அமைச்சர் தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
28 APR 2023 5:37PM by PIB Chennai
யூனியன் பிரதேசங்களின் விரிவான வேளாண் வளர்ச்சிக்கான கூட்டம் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொடக்கவுரையாற்றிய திரு தோமர், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாக கூறினார்.
யூனியன் பிரதேசங்களில் இத்திட்டங்கள், 100 சதவீதம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நலத்திட்டங்கள் மூலம் அனைத்து விவசாயிகளும் பயனடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
யூனியன் பிரதேசங்களில் முறையான வளர்ச்சி அமைய வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று திரு தோமர் குறிப்பிட்டார். மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பது பிரதமர் திரு மோடியின் விருப்பம் என்றும், அதனாலேயே மத்திய அமைச்சர்களும், இதர மூத்த அதிகாரிகளும் எல்லைப்புற கிராமங்களுக்கு செல்வதாக அவர் கூறினார்.
எல்லைப்பகுதிகளில் உள்ள கிராமங்கள் கடைக்கோடியில் இல்லை என்றும், அவை நம் நாட்டின் முதலாவது கிராமங்கள் என்று பிரதமர் திரு மோடி தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். இதை கருத்தில் கொண்டே, அவர்களுடைய வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் நாம் பணியாற்றி வேண்டும் என்று திரு தோமர் குறிப்பிட்டார்.
***
AD/IR/RS/RJ
(रिलीज़ आईडी: 1920603)
आगंतुक पटल : 217