சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

அழிவின் விளிம்பில் இருந்து பெருக்கத்தை நோக்கி: இந்தியாவின் ஒன்பது ஆண்டுகால வனவிலங்குகள் பாதுகாப்புப் பயணம்

2014-2022 காலக் கட்டத்தில் நாட்டின் புலிகள் எண்ணிக்கை 42 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது

Posted On: 25 APR 2023 3:55PM by PIB Chennai

உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் பல்லுயிர் பெருக்க விகிதத்தில் 8 சதவீதமாக இந்தியா உள்ளது.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இயற்கையைப் பாதுகாக்கும் கலாச்சாரத்துடன் பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியா சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. 75 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது உட்பட பல்லுயிர் பெருக்கத்தில் குறிப்பிடத்தக்க பல  முன்னேற்றங்களை இந்தியா கண்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகின் புலிகள் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 75 சதவீத புலிகள் உள்ளன. அண்மையில் இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கை வெளியானது. இதில் 2014-ம் ஆண்டில் 2,226 -ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை தற்போது 3,167 ஆக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இருந்து புலிகள் எண்ணிக்கையில் இது 42 சதவீத வளர்ச்சியாகும்.

தற்போது இந்தியா அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் மற்றும் புலிகள் கொண்ட நாடாக உள்ளது. 2014- முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆசிய வகை சிங்கங்கள் கொண்ட ஒரே நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. அவற்றின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக சர்வதேச புலிகள் கூட்டமைப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் தொடங்கி வைத்தார். 7 வகை புலிகளான சிங்கம், புலி, சிறுத்தை, பனிச் சிறுத்தை, சிவிங்கிப் புலி, ஜாகுவார் மற்றும் பூமா ஆகியவற்றை பாதுகாக்க இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

  

 

***

 

SM/PLM/RS/KRS


(Release ID: 1919528) Visitor Counter : 150
Read this release in: English