சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

2023-24-ம் ஆண்டுக்கு தகுதிவாய்ந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டலம் வரவேற்கிறது

Posted On: 20 APR 2023 6:55PM by PIB Chennai

இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டலம் இளைஞர்களுக்கு குறிப்பாக, பின்தங்கிய  கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் திறமைமிக்க விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குவதன் மூலம் விளையாட்டை  மேம்படுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில், 2023-24-ம் ஆண்டுக்கு பல்வேறு விளையாட்டுகளில் தகுதிவாய்ந்த, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டலம் வரவேற்றுள்ளது.

ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அல்லது மாணவர் அல்லாத 15-18, 18-24 வயதுப் பிரிவினர்  உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்வதற்கு கீழ்க்காணும் விளையாட்டுப் பிரிவுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

(i) கால்பந்து (ஆடவர்) ii) ஹாக்கி (ஆடவர்), iii) கிரிக்கெட் (ஆடவர்), iv) டேபிள் டென்னிஸ் (ஆடவர் & மகளிர்) v) பேட்மிண்டன் (ஆடவர் & மகளிர், vi) பளுதூக்குதல் (ஆடவர்), vii) தடகளப்போட்டிகள் (ஆடவர் & மகளிர்) viii) நீச்சல் (ஆடவர் & மகளிர்).

 

வ.எண்

வகைமை

(Category)

வயதுப் பிரிவு

(Age Group)

தொகை

மாதத்திற்கு

தகுதி வகைமை

(Eligibility Criteria)

1

ப்ரிமியர் உதவித் தொகை

18-24 வயது

ரூ.15,000/-

அ) அணி விளையாட்டு- சீனியர் பிரிவில் நாட்டை பிரதிநிதித்துவம் செய்திருத்தல்

ஆ) தனிநபர் பிரிவு – தேசிய சீனியர் அல்லது அரையிறுதியில் 1 முதல் 6 வரையிலான தரவரிசை

15-18 வயது

ரூ.12,000/-

அ) அணி விளையாட்டு- ஜூனியர் /
சப் ஜூனியர் பிரிவில் நாட்டை பிரதிநிதித்துவம் செய்திருத்தல்

ஆ) தனிநபர் பிரிவு – தேசிய  ஜூனியர் / சப் ஜூனியர்  அல்லது காலிறுதியில் 1 முதல் 6 வரையிலான தரவரிசை

2

எலைட்
உதவித் தொகை

18-24 வயது

ரூ.10,000/-

அ) அணி விளையாட்டு- மாநில/ பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவம் செய்திருத்தல்

ஆ) தனிநபர் பிரிவு – தேசிய சீனியர் அல்லது காலிறுதியில் 7 முதல் 12 வரையிலான தரவரிசை

15-18 வயது

ரூ.8,000/-

அ) அணி விளையாட்டு- மாநில/ பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவம் செய்திருத்தல்

ஆ) தனிநபர் பிரிவு – தேசிய  ஜூனியர் / சப் ஜூனியர்  அல்லது காலிறுதியில் 7 முதல் 12 வரையிலான தரவரிசை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களை கீழ்க்காணும் இணையதளத்தில் அறியலாம் www.fci.gov.in

இந்திய உணவுக்கழகத்தின் தென்மண்டல விளையாட்டுக்கள் பிரிவின் மக்கள் தொடர்பு பொது மேலாளர் ஷைனி வில்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

***

AP/SMB/AG/KRS


(Release ID: 1918359) Visitor Counter : 181


Read this release in: English