குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடிமைப்பணிகள் தினம் 2023 தொடக்க விழாவில் குடியரசு துணைத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
20 APR 2023 2:17PM by PIB Chennai
குடிமைப்பணிகள் தினம் என்பது குடிமைப்பணியாளர்கள் மக்கள் நலனுக்கு தங்களை மறு அர்ப்பணிப்பு செய்துகொள்வதற்கும், தங்களின் உறுதிப்பாட்டையும், சிறந்த பணியையும் புதுப்பித்துக்கொள்வதற்குமான தருணமாகும்.
நாட்டிற்கு முக்கியமானதாக கருதப்படும் இது, நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிர்வாகத்திலும் இப்பணியாளர்களின் முக்கியமான பங்களிப்பை நம் அனைவருக்கும் நினைவுப்படுத்துவதாகும்.
இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பது உண்மையில் பெருமைக்குரியதாகும். 1947-ம் ஆண்டு இதேநாளில் குடிமைப்பணியாளர்களை இந்தியாவின் உறுதியான கட்டமைப்பு என்று இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் குறிப்பிட்டார். நவீன இந்தியாவை ஒன்றுபடுத்திய சர்தாரின் தொலைநோக்குப் பார்வை குடிமைப்பணியாளர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது. நாட்டிற்கான மெச்சத்தக்கப் பங்களிப்புகளை செய்வதற்கு உந்துசக்தியாக உள்ளது.
இந்தியர்களாக இருக்க நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். நமது சிறந்த முயற்சிகளுக்கும், வளர்ச்சிக்கும், அதேபோல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நமது நாகரீக நெறிமுறைகளுக்கும் நாம் பெருமைப்பட வேண்டும்.
உலகளாவிய நமது செல்வாக்கு தற்போது உச்சநிலையில் உள்ளது. உலகப் பிரச்சனைகளில் இந்தியாவின் குரலுக்காக இன்று உலகமே காத்திருக்கிறது. ‘நாடு பிடிக்கும் சகாப்தம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சியின் சகாப்தம்’ என்று பிரதமர் திரு நரேந்திர மோடி 2020-ம் ஆண்டு தெரிவித்தார். 2022-ம் ஆண்டில் ‘இன்றைய சகாப்தம் போருக்கானதல்ல’ என்றும் கூறினார். இதுவே உலகின் குரலாக மாறியிருக்கிறது.
குடிமைப்பணிகள் தினத்தின் இந்த ஆண்டுக்கான மையப்பொருள் மிகவும் பொருத்தமானதாக வளர்ச்சி அடைந்த இந்தியா என்று உள்ளது. குடிமக்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தொலைதூர மக்களையும் சென்றடைதல் என்பதை இது நோக்கமாக கொண்டது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஈடுபடுவதன் மூலம் அனைத்து குடிமக்களுக்குமான கூடுதல் சமத்துவத்தையும், வளத்தையும் சாதிப்பதில் அரசின் உறுதிப்பாட்டை இந்த மைப்பொருள் கோடிட்டு காட்டுகிறது.
சபதத்தில் இருந்து சாத்தியம் என்பதை எட்டுவதற்கான உறுதிப்பாட்டின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை சாதிப்பதற்கு குடிமைப்பணி அச்சாணியாக அமைந்துள்ளது. இந்த மையப்பொருள் அனைத்து குடிமக்களுக்கும் அரசியல் சட்டம் உறுதிசெய்யக் கோருகின்ற நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இருக்கிறது.
நமது புதிய மந்திரமான தற்சார்பு பொருளாதாரத்தை அடைவதற்கு பொது நிர்வாகத்தில் முக்கிய அங்கமாக இவை இருக்கின்றன. குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்; நேரடிப் பயன் பரிமாற்றம்; குடிமக்களை மையப்படுத்துதல்; வெளிப்படைத்தன்மை; மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருந்தல் போன்றவை பொதுமக்கள் சேவைக்கு உகந்த நடைமுறைகளாக உருவாகியுள்ளன.
குடிமக்கள் சேவை என்ற மனநிலை சாமான்ய மக்களுக்கு சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. தொழில்நுட்ப ஈடுபாடு சேவை வழங்குவதை விரைவுபடுத்தியுள்ளது. இதனால் நீண்டகாலமாக இருந்த இடைத்தரகர் முறை முடிவுக்கு வந்துள்ளது. கிராமப்புற வீட்டுவசதி, சமையல் எரிவாயு, துப்புரவு, குடிநீர், மின்விநியோகம், வங்கிக் கணக்குகள் அல்லது பணம் செலுத்துவதில் டிஜிட்டல் மயம் என எந்தத்துறையாக இருந்தாலும் மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
***
AP/SMB/AG/KRS
(Release ID: 1918318)
Visitor Counter : 156