சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா சி.எஸ்.ஐ.ஆர் வளாகத்தில் கொண்டாடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 18 APR 2023 5:12PM by PIB Chennai

பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் 18 ஏப்ரல் 2023 அன்று சி.எஸ்.ஐ.ஆர்-கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் (சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி) மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் மெட்ராஸ் காம்ப்ளக்ஸ் (சி.எம்.சி) ஆகியவற்றில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் எஸ்.தமிழ்வாணன், டாக்டர் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விழாவைத் தொடங்கி வைத்தார்.

 

சி.எஸ்.ஐ.ஆர்-எஸ்.இ.ஆர்.சி இயக்குநரும் சி.எம்.சி.யின் ஒருங்கிணைப்பு இயக்குநருமான டாக்டர் என்.ஆனந்தவள்ளி தலைமை வகித்தார். சமத்துவத்தின் அடையாளமாகவும், வசீகரமான மற்றும் பன்முக ஆளுமையாகவும், அறிஞராகவும், பெண்கள் மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்காக நின்ற தொலைநோக்கு பார்வை கொண்டவராகவும் டாக்டர் அம்பேத்கரை நினைவு கூர்ந்தார். அம்பேத்கரின் வாழ்க்கை, தொழில், பங்களிப்புகள், சாதனைகள் குறித்து சுருக்கமாகப் பேசினார். நமது அரசியலமைப்பை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு, தேசிய பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, பெண்களின் வலிமை மீதான அவரது நம்பிக்கை ஆகியவற்றை அவர் நினைவு கூர்ந்தார், மேலும் அவரது மகத்தான பங்களிப்புகள் நவீன இந்தியாவில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சுட்டிக்காட்டினார்.

 

விழாவில் பேசிய டாக்டர் தமிழ்வாணன், டாக்டர் அம்பேத்கர் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் செய்த பங்களிப்புகள் குறித்து பகிர்ந்து கொண்டார். அனைத்து வகையான சமூகத் துன்பங்களிலிருந்தும் அனைத்து மனிதர்களின் விடுதலைக்காக நின்று பாடுபட்டவர்; இந்தியா ஒரு நவீன நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர். டாக்டர் அம்பேத்கர் பன்முக ஆளுமை கொண்டவர் என்றும் வெளிநாட்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்றும் அவர் கூறினார். மனிதர்களின் விடுதலை, சாதியற்ற சமுதாயம், சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், இந்திய சமூகத்தின் அனைத்து விளிம்புநிலை வகுப்பினருக்கும் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்காக பாபாசாகேப் நின்றார் என்றும், அவர் எதற்காக நின்றார் என்பதை நோக்கி விரிவாக உழைத்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

 

***

AP/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1917749) வருகையாளர் எண்ணிக்கை : 594
இந்த வெளியீட்டை படிக்க: English