சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம் டிஜிட்டல் பொதுப் பொருட்களை உருவாக்க இந்தியா முனைப்பு: டாக்டர். பாரதி பிரவீன் பவார்
Posted On:
16 APR 2023 9:42PM by PIB Chennai
பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பின் மூலம் டிஜிட்டல் பொதுப் பொருட்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் டாக்டர். பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
கோவா முதலமைச்சர் டாக்டர். பிரமோத் சாவந்த் முன்னிலையில் அம்மாநிலத்தில் டிஜிட்டல் சுகாதார மாநாடு 2023ல் நடைபெற்றது. இந்திய தொழிலக கூட்டமைப்பு மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய டாக்டர். பாரதி பிரவீன் பவார், டிஜிட்டல் பொதுப் பொருட்களை உலக நாடுகள் அனைத்தும் பயன்படுத்தும் நிலையை உருவாக்கி தரவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும் கூறினார்.
உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு என்ற குறிக்கோளின் அடிப்படையில் டிஜிட்டல் சுகாதாரப் புத்தாக்க மற்றும் தீர்வுகள், ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதை நோக்கிய மேம்படுத்தப்பட்ட சுகாதார சேவைகள் ஆகியவற்றை இந்தியாவின் ஜி20 சுகாதார பணிக்குழு நோக்கமாகக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.
மத்திய அரசின் ஆயூஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம், இ-சஞ்ஜீவனி தொலைதூர மருத்துவ சேவை, பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா, ஆகியவை நாடு முழுவதும் டிஜிட்டல் சுகாதார சூழலை வலிமைப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜி20 இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் டிஜிட்டல் சுகாதாரத்தை முன்னிறுத்திய உலகளாவிய டிஜிட்டல் கட்டமைப்பின் ஒருமித்த கருத்துகளை உருவாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த், 4வது தொழில் புரட்சிக்கு சுகாதாரம் சார்ந்த தொழில்நுட்பங்கள் இன்றியமையாதவையாக திகழ்வதாக டாக்டர். பவார் கூறினார்.
***
AD/ES/SG/KRS
(Release ID: 1917276)
Visitor Counter : 164