ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
மருத்துவ பரிசோதனைகள் சார்ந்த தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து ஜி20 இரண்டாவது சுகாதார பணிக்குழுக் கூட்டத்தை ஒட்டிய ஆலோசனை
प्रविष्टि तिथि:
16 APR 2023 6:18PM by PIB Chennai
மருத்துவ பரிசோதனைகள் சார்ந்த தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்து ஜி20 இரண்டாவது சுகாதார பணிக்குழுக் கூட்டத்தை ஒட்டி புதுதில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஜி20 இரண்டாவது சுகாதார பணிக்குழு கோவாவில் ஏப்ரல் 17ம் தேதி முதல் -19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகளான ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இந்தோனேசியா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள், சர்வதேச அமைப்புகள், உலக நாடுகளை சேர்ந்த மருத்துவ பரிசோதனை தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மத்திய அரசின் மருந்தகத்துறை, ஸ்விட்சர்லாந்தின் ஃபைன்ட் (எஃப்ஐஎன்டி) அமைப்பு, யுனிடெய்டுகோ ஆகியவை இணைந்து இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதை ஒட்டிய முன்னோட்டக் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய மருந்தகத் துறையின் செயலாளர் திருமதி எஸ்.அபர்ணா நோய்களின் சர்வதேச பரவல் காலத்தை எதிர்கொள்வதற்கு வலிமையான ஒத்துழைப்பு அவசியம் என்றார். மருத்துவ பரிசோதனைகள் பொதுவாக நோய்கள் பரவாமல் தடுப்பது, குறித்த நேரத்தில் சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகளாவிய சுகாதார பாதுகாப்பாக நீட்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்றைய கூட்டம் இரண்டாவது சுகாதார பணிக்குழு கூட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் மூலம் மாநில அளவில் மருத்துவ பரிசோதனைப் பொருட்களை மேம்படுத்துவது, சுகாதார பாதுகாப்பு, பெருந்தொற்றிலிருந்து தற்காத்தல், நோய்களை எதிர்கொள்வதற்கான தயார்நிலை மற்றும் உலகளாவிய சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய வழிவகுக்கும் என்று அபர்ணா கூறினார். மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்தகத்துறை, மருந்துகளின் விலை நிர்ணயம், மலிவான விலையிலான மருந்துகளை கையிருப்பு வைத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1917115
***
AD/ES/SG/KRS
(रिलीज़ आईडी: 1917275)
आगंतुक पटल : 260