சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மும்பையில் நடைபெற்ற துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்து குறித்த 11-வது ஈராண்டு சர்வதேச மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்

Posted On: 13 APR 2023 6:25PM by PIB Chennai

சூழலியலும், சுற்றுப்புற சூழலும் மத்திய அரசின் உயர் முன்னுரிமையாக உள்ளது என்றும் மாசுக் கட்டுப்பாட்டுக்கு பல வழிகள் பற்றி பரிசீலிக்கும் அரசு அதற்கேற்ப போர்க்கால அடிப்படையில்,  பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சரக்குப்போக்குவரத்து குறித்த 11-வது ஈராண்டு சர்வதேச மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

நாட்டிற்கு மிக முக்கியமானது பொதுப்போக்குவரத்து என்றும், நாட்டின் மொத்த காற்று மாசுப்பாட்டில் சுமார் 40 சதவீதம் சாலைப்போக்குவரத்தால் ஏற்படுகிறது என்றும், இதனால் பொதுப்போக்குவரத்தை அதிகரிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக மின்சாரப் பேருந்துகள், மின்சாரக் கார்கள், மின்சார ஸ்கூட்டர்கள் போன்றவை இயக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசின் முயற்சிகள் காரணமாக மாசு பிரச்சனை அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெருமளவு தீர்க்கப்படும் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார். சரக்குப் போக்குவரத்திற்கு தற்போது 14 முதல் 16 சதவீதம் வரையுள்ள செலவை 2024 வாக்கில் 9 சதவீதமாகக் குறைக்க முயற்சி செய்யப்படுவதாகவும், சிறந்த சாலைகள் குறைந்த செலவு ஆகியவை வணிகத்தையும், தொழில் துறையையும் விரிவாக்க உதவும் என்றும் திரு நிதின் கட்கரி தெரிவித்தார்

 

***

AP/SMB/RS/KPG



(Release ID: 1916361) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Hindi , Marathi