அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சாரத் தேவையில் ஏறத்தாழ 9% மின்சாரம் அணுசக்தி மூலங்களிலிருந்து பெறப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Posted On: 09 APR 2023 3:48PM by PIB Chennai

அறிவியல் & தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுசக்தி ஆதாரங்களில் இருந்து கிட்டத்தட்ட 9% மின்சாரம் பங்களிக்க வாய்ப்புள்ளது. 2070க்குள் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதற்கு இது உதவும்.

 

மும்பையில் அணுசக்தித் துறையின் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) மூத்த விஞ்ஞானிகள் குழுவுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்திய பின்னர் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார்.

 

 2030ஆம் ஆண்டுக்குள் 20 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தித் திறனை எட்டுவது,அமெரிக்கா  மற்றும் பிரான்ஸ்க்கு அடுத்தபடியாக இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய அணுசக்தி உற்பத்தியாளராக உயர்த்துவது ஆகிய இரண்டும் அணுசக்தித் துறை வகுத்துள்ள மற்ற இலக்குகள் என்றும் அமைச்சர் கூறினார்.

 

டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த விரைவான முன்னேற்றத்திற்கான பெருமை பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சேரும் என்று குறிப்பிட்டார். அவர் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக ஒரே முறையில் 10 உலைகளை  அங்கீகரிக்கும் முடிவை எடுத்ததோடு பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியின் கீழ் அணுசக்தி நிறுவல்களை உருவாக்க அனுமதித்தார். இதன் விளைவாக, இன்று இந்தியா செயல்படும் உலைகளின் எண்ணிக்கையில் உலகில் ஆறாவது இடத்தில் உள்ளது. கட்டுமானத்தில் உள்ளவை உட்பட மொத்த உலைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், மோடி ஆட்சியின் தனிச்சிறப்பு என்னவென்றால், முதல் முறையாக, அணு ஆற்றல் பல்வேறு துறைகளில்  பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக, வேளாண்துறையில் ஆப்பிள் போன்ற பழங்கள் மற்றும் வேளாண் பொருட்களை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாப்பதற்காக பயன்படுகிறது. மருத்துவத் துறையில்  புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சையில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்காக உதவுகிறது. அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதற்கான வழியை இந்தியா உலகிற்குக் காட்டியுள்ளது என்றார்.

***

SM/CJL/DL



(Release ID: 1915101) Visitor Counter : 171


Read this release in: Telugu , English , Urdu , Hindi