சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Posted On: 05 APR 2023 5:02PM by PIB Chennai

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் சார்பாக வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி தொடர்பான கல்வித் தகவல்கள் 2021-2022 அறிக்கையின்படி நாடு முழுவதும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் இதர வகுப்பின மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு கல்வி தொகுப்பு ஒதுக்கீடாக வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 3,500-யும், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு ரூ.7,000 வழங்கப்படும்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவித்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 49,80,174 ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டில் 5,018 லட்சமும், 2021-22-ம் ஆண்டில் 5,394 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு ஏ. நாராயணசாமி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

 

***

AP/GS/RJ/KPG



(Release ID: 1914029) Visitor Counter : 103


Read this release in: English , Urdu