அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 2021-22-ம் ஆண்டில் நாட்டில் மொத்த மின் உற்பத்தியில் 3.15 சதவீதத்துடன் அணுமின் உலைகள் 47,112 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2023 3:57PM by PIB Chennai

கடந்த 2021-22-ம் ஆண்டில் நாட்டில் மொத்த மின் உற்பத்தியில் 3.15 சதவீதத்துடன் அணுமின் உலைகள் 47,112 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளதாக மத்திய அறிவியல்,  தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை   இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

இது குறித்து மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், தற்போதைய அணுமின் உற்பத்தி திறன் 6780 மெகாவாட்டாக உள்ள நிலையில் அதனை 2031-ம் ஆண்டுக்குள் 22480 மெகாவாட்டாக  உயர்த்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

***

AP/IR/AG/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1913953) வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu