உள்துறை அமைச்சகம்
நகர பாதுகாப்புத் திட்டங்கள்
Posted On:
05 APR 2023 4:06PM by PIB Chennai
இந்திய அரசியல் அமைப்பின் 7-வது பட்டியலின்படி காவல் மற்றும் பொது ஒழுங்கு மாநிலப் பட்டியலில் உள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரித்தல், மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துக்கு பாதுகாப்பு ஆகியவை சம்பந்தப்பட்ட மாநிலங்களுடையதாகும். எனினும் மகளிர் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நிர்பயா நிதித் திட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகத்தின் மூலம் நகரப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய 8 நகரங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இத்தகவலை உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஸ்ரா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.
***
AP/IR/AG/KPG
(Release ID: 1913948)