கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
1870-க்குப் பிறகு கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் 2022-23ல் சரக்குக் கையாளுதலில் வரலாற்றுச் சாதனை
Posted On:
04 APR 2023 5:06PM by PIB Chennai
கொல்கத்தா டாக் சிஸ்டம் மற்றும் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் உட்பட கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் (SMP கொல்கத்தா) அதன் 153 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக 2022-23-ம் ஆண்டில் 65.66 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டது. 2021-22ல் கையாளப்பட்ட 58.175 மில்லியன் டன் சரக்குகளை விட இது 12.87% அதிகமாகும்.
2022-23 ஆம் ஆண்டில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 7.5 மில்லியன் டன் சரக்குப் போக்குவரத்து உயர்வைப் பதிவு செய்தது. இது அதன் வரலாற்றில் அடையப்பட்ட மிக அதிக வளர்ச்சியாகும்.
உற்பத்தி, பாதுகாப்பு, வணிக மேம்பாட்டு திறன் பயன்பாடு போன்றவற்றை மேம்படுத்த துறைமுகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பதாக திரு.பி.எல்.ஹரநாத் கூறினார். இந்தியாவின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் 2022-23-ம் ஆண்டிற்கான சரக்குக் கையாளுதலில் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் 6-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.
பெல்ஜியத்திலுள்ள ஆண்ட்வெர்ப் துறைமுகம் மற்றும் சென்னை ஐஐடி ஆகியவற்றுடன் இணைந்து துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு இரவு நேரத்தில் வழிகாட்டுவது குறித்து சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத் தலைவர் திரு. பி.எல்.ஹரநாத் மத்திய அமைச்சர் சர்வானந்த சோனோவால், மத்திய இணையமைச்சர் மாநில அமைச்சர் சாந்தனு தாக்கூர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
-----
AP/CR/KPG
(Release ID: 1913660)
Visitor Counter : 158