சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை ஒரகடத்தில் புதிய துணை அஞ்சல் அலுவலகம் திறப்பு
Posted On:
31 MAR 2023 6:27PM by PIB Chennai
தொழிற்சாலைகளின் மையமாக மாறிவரும் ஒரகடத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு அஞ்சல் சேவைகளை வழங்குவதற்காக அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை தமிழ்நாடு வட்டாரத்தின் முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி ஜெ சாருகேசி இன்று திறந்து வைத்தார். இந்த விழாவில், சென்னை நகர மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு ஜி நடராஜன், சென்னை நகர மண்டல அஞ்சலக சேவை இயக்குநர் திரு கே சோமசுந்தரம், காஞ்சிபுரம் வட்டார அஞ்சல் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் திரு ஜி பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாத்தூரில் செயல்பட்டு வந்த அஞ்சலக கிளை அலுவலகம் தரம் உயர்த்தப்பட்டு துணை அஞ்சலகமாக ஒரகடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மாத்தூர், ஒரகடம், சென்னப்பாக்கம், வைப்பூர், வல்லம், வல்லக்கோட்டை, எறையூர் மற்றும் எறையூர் மோட்டூர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அஞ்சல் சேவைகளைப் பெறுவர்.

***
AD/ES/KPG/KRS
(Release ID: 1912627)
Visitor Counter : 128