உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலக்குகள்

Posted On: 28 MAR 2023 1:03PM by PIB Chennai

பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் ( பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா ) என்பது தேவையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டமாகும். நாடு முழுவதும் உள்ள தொழில் முனைவோர் மற்றும் முதலீ்ட்டாளர்களிடமிருந்து முன் மொழிவுகள் பெறப்பட்டு துணைத் திட்டங்கள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. மாநில அரசுகளின் நிறுவனங்கள்,  பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் போன்றவை வழிகாட்டுதல்களை சமர்பிர்க்க தகுதி உடையவையாகும். இந்த நிறுவனங்களுக்கு மானிய அடிப்படையில் உணவுப் பதப்படுத்தும் மையங்களை அமைக்க நிதி உதவி வழங்கப்படும்.

     இந்த திட்டத்தின் கீழ் 2017 - 18 முதல் 2022  - 23 வரை பல்வேறு துணை திட்டங்களுக்கு ரூ. 4099.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூ. 3312.63 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 1098 உணவுப் பதப்படுத்தும் துணைத் தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ. 8117 கோடி உதவித் தொகைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 71 திட்டங்களுக்கும், புதுச்சேரியில் ஒரு திட்டத்திற்குமான முன் மொழிவுகளுக்கு பிரதமரின் விவசாயிகள் ஆதரவு திட்டத்தின் கீழ் உதவி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

     இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் அளித்த பதிலில் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.

AD/PLM/MA/KRS

***



(Release ID: 1911446) Visitor Counter : 105


Read this release in: English , Urdu