உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
தற்போதைய முனையங்கள், புதிய முனையங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துதல், ஓடுதளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் விமானப்போக்குவரத்துத் துறையில் சுமார் ரூ.98,000 கோடி அளவிற்கு முதலீடு செய்ய இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர விமான நிலைய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2023 3:45PM by PIB Chennai
தற்போதைய முனையங்கள், புதிய முனையங்களின் விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்துதல், ஓடுதளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறையில் சுமார் ரூ.98,000 கோடி அளவிற்கு முதலீடு செய்ய இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர விமான நிலைய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இவற்றில் சுமார் ரூ. 60,000 கோடி தற்போதைய விமான நிலையங்களின் மேம்பாட்டிற்காகவும், சுமார் ரூ.38,000 கோடி புதிய பசுமை விமான நிலையங்களை உருவாக்கவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
21 புதிய பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.45,000 கோடிக்கும் மேலாக உள்ளது.
சென்னை விமான நிலையம் 2-ம் கட்ட நவீனமயமாக்கலுக்கு ரூ.2,467 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையக் கட்டிடம் உள்ளிட்டவற்றின் மேம்பாட்டிற்காக ரூ.951.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டிற்காக ரூ.380.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் திரு ஓய்வுபெற்ற ஜெனரல் வி கே சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக கூறினார்.
***
AD/IR/RJ/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1911245)
வருகையாளர் எண்ணிக்கை : 185