உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இரண்டு விமானப்போக்குவரத்து திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளது

प्रविष्टि तिथि: 27 MAR 2023 3:42PM by PIB Chennai

விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இந்திய விமான நிலையங்கள் ஆணையம், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து இதுவரை இரண்டு விமானப்போக்குவரத்து திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளது. பயிற்சியில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், அவர்களுக்கான பயிற்சி ஆகியவற்றை ஏரோஸ்பேஸ் மற்றும் விமானப்போக்குவரத்துத் துறை திறன் குழுமம் கண்காணிக்கிறது.

சண்டிகரில் விமானப் போக்குவரத்து பன்முகத்திறமை மேம்பாட்டு மையமும், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமானப்போக்குவரத்து திறன் மேம்பாட்டு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏரோஸ்பேஸ் மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை திறன் குழுமம் 108 பயிற்சி மையங்களுக்கு அனுமதியளித்துள்ளது.

இத்தகவலை விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வுபெற்ற ஜெனரல் வி கே சிங் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கூறினார்.

***

AD/IR/RJ/KRS


(रिलीज़ आईडी: 1911178) आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu