ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது: ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ்

இடுகை இடப்பட்ட நாள்: 24 MAR 2023 5:47PM by PIB Chennai

பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இவை அமைக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டின் விருதுநகர், தெலங்கானாவின் வாராங்கல், குஜராத்தின் நவ்சாரி, கர்நாடகாவின் கல்புர்கி, மத்திய பிரதேசத்தின் தர், உத்தரப்பிரதேசத்தின் லக்னோ / ஹர்தோய், மகாராஷ்டிராவின் அமராவதி ஆகிய இடங்கள் பிஎம் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்கு இறுதிசெய்யப்பட்டுள்ளன.  இத்திட்டம் தொடர்பான விவரங்களை www.texmin.nic.in. என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தையும் (எஸ்ஐடிபி) அரசு அமல்படுத்துகிறது. இத்திட்டத்தில் 54 ஜவுளி பூங்காக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவற்றில் 31 ஜவுளி பூங்காக்களுக்கான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 23 ஜவுளி பூங்காக்களுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. தமிழ்நாட்டில் பல்லடம், குமாரபாளையம், கரூர், மதுரை ஆகிய இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின்  (எஸ்ஐடிபி)  கீழ் ஜவுளி பூங்கா பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.

***

SM/PLM/AG/KRS


(வெளியீட்டு அடையாள எண்: 1910488) வருகையாளர் எண்ணிக்கை : 267
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi