சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையின மக்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள்
Posted On:
23 MAR 2023 5:22PM by PIB Chennai
சிறுபான்மையின மக்கள், பொருளாதார அடிப்படையில் நலிவடைந்தவர்கள் உள்ளிட்டவர்களின் நலன் கருத்தி மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், ஜவுளித்துறை அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் மூலம் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, சிறுபான்மையினர் நல அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள பட்டியலிடப்பட்ட 6 சிறுபான்மையின மக்களுக்கு பொருளாதார மற்றும் கல்விச் சார்ந்த அதிகாரமளிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இந்த அமைச்சகத்தின் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களில், ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டம், பிரதமரின் விகாஸ் திட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்தத் திட்டங்களில் கல்வி உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
***
SM/ES/RS/KRS
(Release ID: 1910300)
Visitor Counter : 147