சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை
Posted On:
23 MAR 2023 5:33PM by PIB Chennai
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சகம் 2 உதவித் தொகை திட்டங்களை செயல்படுத்துகிறது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான உதவித்தொகை திட்டம் அதில் ஒன்றாகும். மற்றொன்று பேகம் ஹசரத் மஹல் திட்டமாகும். இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் பிரதமரின் கல்வி அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை போதுமான நிதி வசதியை கொண்டுள்ளது. அதன் நிதியில் இருந்து வரும் வட்டி வருவாய் இந்த அறக்கட்டளையின் பணிகளுக்கும் உதவித் தொகை வழங்கும் நடவடிக்கைகளுக்கும் போதுமானதாக உள்ளது.
இந்த தகவலை மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜூபின் இரானி தெரிவித்துள்ளார்.
***
SM/PLM/AG/KRS
(Release ID: 1910294)
Visitor Counter : 191