சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மை இனத்தவருக்கான திறன்மேம்பாடு அளிப்புத்திட்டம்
Posted On:
23 MAR 2023 5:37PM by PIB Chennai
மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் சார்பில் பட்டியலிடப்பட்ட 6 சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிப்புத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு அவர்களது தகுதிகளுக்கேற்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். சிறுபான்மையின மக்களை சுய தொழில் செய்பவர்களாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் இலக்காகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திட்ட செயலாக்க ஏஜென்சிகள் மூலம் வழங்கப்படுகின்றன. தற்போது இந்தத் திட்டம் பிரதமரின் விகாஸ் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் திறன் மேம்பாட்டை உறுதி செய்வதுடன், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய சிறுபான்மையின பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவும் உதவும். இதுவரை 4.68லட்சம் பயனாளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2.28 லட்சம் பயனாளிகள் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்று இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஸூபின் இரானி நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
***
(Release ID: 1910025)
AD/ES/RS/KRS
(Release ID: 1910291)
Visitor Counter : 162