குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பெண்களால் நடத்தப்படும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உதய் இணையதளத்தில் பதிவு

प्रविष्टि तिथि: 23 MAR 2023 3:37PM by PIB Chennai

பெண்களால் நடத்தப்படும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உதய் இணையதளத்தில் பதிவு செய்திருக்கின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக உதயம் இணைய தளம் உருவாக்கப்பட்டு, குறிப்பாக பெண்களால் இயக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  தங்களது பெயர்களை பதிவு செய்வதற்காக  சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 2022-23ம் நிதியாண்டில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் பெண்களால் நடத்தப்படும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த இணைய தளத்தில்  பதிவு செய்துள்ளன.

இந்த இணையதளத்தில் 2020- ஆண்டு ஜூலை மாதம் முதல் 2023ம் ஆண்டு  மார்ச் 17ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பதிவு செய்த மகளிரால் நடத்தப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பட்டியலில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,67,758 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் 3,89,518 நிறுவனங்களும் இயங்குகின்றன. இதில் தமிழ்நாட்டில் 3,83,436 குறு நிறுவனங்களும்,  5,807 சிறு நிறுவனங்களும், 275 நடுத்தர நிறுவனங்களும் இயங்குவது தெரியவந்துள்ளது.  புதுச்சேரியில் மொத்தம் 6,630 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இயங்குகின்றன.

இதேபோல், மகளிரால் நடத்தப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் சம்ரத் என்னும் திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், சந்தை மேம்பாட்டுக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதியாண்டில் 7 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

***

SM/ES/RS/KRS

 


(रिलीज़ आईडी: 1910088) आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Telugu