நிதி அமைச்சகம்
ஜி20- கூட்டமைப்பின் இரண்டாவது நிதி கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் தமிழ்நாட்டின் சென்னையில் 2023, மார்ச் 24,25-ஆம் தேதிகளில் நடக்கிறது
Posted On:
23 MAR 2023 3:05PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் இரண்டாவது நிதி தொடர்பான கட்டமைப்பு பணிக்குழு கூட்டம் தமிழ்நாட்டின் சென்னையில் 2023, மார்ச் 24,25-ஆம் தேதிகளில் நடக்கிறது. மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் திரு வி அனந்த நாகேஸ்வரன் மற்றும் இங்கிலாந்து நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் திருமதி கிளாரி லொம்பார்டெலி இணைந்து இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்க உள்ளனர். 20 உறுப்புநாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ள நாடுகள், பல்வேறு சர்வதேச மற்றும் மண்டல அமைப்புகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
ஜி20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டமானது மேக்ரோ பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்தியாவின் 2023, ஜி20 தலைமைத்துவமானது, உணவு, எரிசக்தி, பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம், நிதிப்பரிமாற்ற பாதைகள் போன்றவைகள் மீது இந்தக் குழு அதிக கவனம் செலுத்தும். சென்னையில் நடைபெற உள்ள ஜி20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்தில் மேற்கூறிய பிரச்சனைகள் சம்பந்தமாக உறுப்பினர்கள் தங்களது கொள்கை முடிவு சார்ந்த அனுபவங்களை எடுத்துரைப்பர். ஜி20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை வரும் ஏப்ரல் 12-13 தேதிகளில் வாஷிங்டன் டிசியில் ஜி20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் தெரியப்படுத்துவர்.
இந்த ஜி20 கட்டமைப்பு பணிக்குழுக் கூட்டத்திற்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையின் கீழ், மார்ச் 16, 2023 முதல் ரிசர்வ் வங்கி பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் ஜி20 விவாதங்களை முழுமையாக்கி, மக்கள் நலன் சார்ந்த வகையில் ஏற்படுத்தி வருகிறது. 2023, மார்ச் 23ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஜி20 நாடுகளுக்கு இந்தியாவின் தலைமைத்துவம் 2023 –ல் இந்தியா மற்றும் உலக நாடுகளுக்கான சிறப்பு கவனத்தின் பிரதிபலிப்புகள் என்ற தலைப்பில் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன் உரையாற்றுகிறார்.
ஜி20 கட்டமைப்புப் பணிக்குழுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக பருவ நிலை மாறுபாடு மீதான மேக்ரோ பொருளாதாரத்தின் தாக்கங்கள் மற்றும் நிதி பரிமாற்ற பாதைகள் என்ற தலைப்பில் 2023 மார்ச் 25ம் தேதி விவாதம் நடைபெற உள்ளது. இந்த விவாதம், சிஓபி 28-க்கு தலைமை வகிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அறுசுவை இரவு விருந்து வழங்கப்படும். இதில் தமிழ்நாட்டின் தொன்மைவாய்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய சுவையுடன் கூடிய விதவிதமான உணவு வகைகளை ருசிக்கும் வாய்ப்பு வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு கிடைக்கும்.
***
SRI/GS/PLM/ES/RS/RJ/AG/KRS
(Release ID: 1909913)
Visitor Counter : 181