சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மூத்த குடிமக்களுக்கான நலத்திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
21 MAR 2023 3:57PM by PIB Chennai
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு முதியோர் இல்லங்களை பராமரித்தல், உறைவிடம், சத்துணவு, மருத்துவ வசதி, பொழுதுபோக்கு உள்ளிட்ட வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 566 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 67 இல்லங்களும், புதுச்சேரியில் இரண்டு இல்லங்களும் செயல்படுகின்றன.
மக்களவையில் இத்தகவலை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் சுஷ்ரி பிரதிமா பவுமிக் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
SM/PKV/MA/KRS
***
(வெளியீட்டு அடையாள எண்: 1909299)
வருகையாளர் எண்ணிக்கை : 207