விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுதானிய உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு

Posted On: 21 MAR 2023 6:14PM by PIB Chennai

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு ரூ.25.920 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் சிறுதானியங்களை ஏற்றுமதி செய்யும் 7-வது மிகப்பெரிய நாடாகவும், அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா திகழ்ந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிறுதானியங்களில் ராகி, திணை, சாமை முக்கியமானவை. இந்த சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாகவும் சிறுதானியங்களை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச்செல்லும் முயற்சியாகவும் 2018-19 நிதியாண்டு முதல் தேசிய  உணவு பாதுகாப்பு இயக்கம் வேளாண்துறை சார்பில்  தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 14 மாநிலங்களில் சிறுதானிய உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 2022-23ம் நிதியாண்டின் அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.61.935 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக கர்நாடகாவுக்கு ரூ.60430 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

SM/ES/RS/KRS

 


(Release ID: 1909297) Visitor Counter : 185
Read this release in: English , Urdu