சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் புதிய புற்றுநோய் மையங்கள் அமைப்பு
Posted On:
21 MAR 2023 3:00PM by PIB Chennai
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை சார்பில் தேசிய அளவிலான புற்று நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் நீரிழிவு நோய், இதயம் சார்ந்த நோய்கள் உள்ளிட்டவையும் இடம்பெறும். இதன் கீழ், உள்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்துதல், மனித வள மேம்பாடு, சுகாதார முன்னேற்றம், புற்று நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எளிதில் பரவாத நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்டும். இந்த தேசிய திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான 708 கிளீனிக்-கள், 301 மாவட்ட அளவிலான அன்றாட சேவை மையங்கள், 5671 சமூக சுகாதார மையங்களுடன் கூடிய கிளீனிக்குகள் அமைக்கப்படும். இந்த தேதியத்திட்டத்தின் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் நிறுவனத்தில் புற்று நோய் சார்ந்த சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையைமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் இவ்வாறு கூறியுள்ளார்.
***
SM/ES/RS/RJ
(Release ID: 1909248)
Visitor Counter : 188