சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய இளைஞர் மேம்பாட்டு கணினியியல் ஒருங்கிணைந்த மாநாடு

Posted On: 21 MAR 2023 4:22PM by PIB Chennai

ஸ்ரீபெரும்புதுரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், புதுதில்லியின் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி சபையுடன் (ஐசிஎஸ்எஸ்ஆர் ) இணைந்து தேசிய இளைஞர்  மேம்பட்ட கணினியியல் ஒருங்கிணைந்த மாநாட்டை நடத்துகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறும்.

      தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் லலித் குமார் அவஸ்தி கலந்து கொண்டார். ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் சிப்நாத் தேப் சிறப்புரையாற்றினார். உயர்கல்வி நிறுவனங்களில் கணினி அறிவியல் துறையில் மாநாடுகள் நடத்தப்படுவது மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். கணினி அறிவியலில் இன்று புதிதாக இருக்கும் ஒன்று நாளை பழையதாகி விடும் என்று அவர் தெரிவித்தார்.

      வேகமாக மாறிவரும் கணினி அறிவியல் துறையில். என்ன நடக்கிறது என்பதை மாணவர்கள், ஆசிரியர்கள் , அறிஞர்கள் உள்ளிட்டோர் முழுமையாக  அறிந்து கொள்ள இந்த மாநாடு பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

      மாநாட்டில் மொத்தம் 21 கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாநாட்டில் நூற்றுக்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

 


(Release ID: 1909139) Visitor Counter : 116


Read this release in: English