மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இந்திய வங்கி அமைப்பு மிகவும் ஆற்றலுடனும் வலிமையுடனும் உள்ளது: மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
Posted On:
16 MAR 2023 11:30PM by PIB Chennai
இந்திய வங்கி அமைப்பு வலிமையானதாகவும், ஆற்றல் திறனுடனும் உள்ளது என்று கூறியுள்ள மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், ஸ்டார்ட்அப்கள் இந்திய வங்கிகளை தங்களுக்கு விருப்பமான கூட்டாண்மை நிறுவனங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
லெனோவா டெக் வேர்ல்ட் இந்தியா 2023 இல் நடந்த உரையாடல் நிகழ்ச்சியில், நடந்த முறைசாரா விவாதத்தின் போது, 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள வங்கி டெபாசிட்களை கிப்ட் சிட்டிக்கு மாற்றுவது பற்றி குறிப்பிட்ட அமைச்சர், குஜராத்தின் கிப்ட் சிட்டி, இந்தியாவின் வளர்ந்து வரும் வங்கி முறையின் அடையாளம் என்று கூறினார். ஸ்டார்ட்அப்கள் மூலதனத்தை டெபாசிட் செய்யக்கூடிய பாதுகாப்பான புகலிடங்களாக வங்கிகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையும் ஆதரவும், குறைக்கடத்திகள் துறையில் இந்தியா மேற்கொண்டுள்ள முன்னேற்றத்திற்கு முக்கியமானதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்வின் கருப்பொருள் ‘மாறிவரும் உலகை மேம்படுத்தும் ஸ்மார்ட்டான தொழில்நுட்பம்’ என்பதாகும். 200க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 2000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காணொலி மூலம் பங்கேற்றனர்.
****
(Release ID: 1907929)