ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 கோடி கழிப்பறைகளும், 2.23 லட்சம் சமுதாய தூய்மை வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன

Posted On: 16 MAR 2023 2:45PM by PIB Chennai

தூய்மை இந்தியா இயக்கம் 2014-ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தொடங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதிக்குள் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் இந்த இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. 2014-முதல்
2019-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்தில் நாடு முழுவதும் 10 கோடி தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன.

அனைத்து மாநிலங்களும் 2019-அக்டோபர் 2ம் தேதி திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக தங்களது மாநிலத்தை அறிவித்தன. எனினும், விடுப்பட்ட வீடுகள் மற்றும் புதிய வீடுகளில் இத்திட்டத்தின் கீழ், கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.  2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ், நடத்தை மாற்றம் தொடர்பான பிரச்சார இயக்கம், கிராமங்கள், திறந்தவெளி கழிப்பிடங்களற்ற பகுதிகளாக இருப்பதை உறுதிசெய்தல், கிராமப்புறங்களில் திட மற்றும் திரவ கழிவு மேலாண்மைக்காக வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் 2வது கட்டத்தின் கீழ், 92 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு முதல் இது வரை கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 கோடி  கழிப்பறைகளும், 2.23 லட்சம் சமுதாய தூய்மை வளாகங்களும் கட்டப்பட்டுள்ளன.

2022-ம் ஆண்டில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 709 மாநிலங்களில் அமைந்துள்ள 17,559 கிராமங்களில் உள்ள 1, 75, 521 வீடுகளில் கிராமப்புற தூய்மைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 95.4 சதவீதம் வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளதும், அவற்றை அந்த வீடுகளில் உள்ள மக்கள் தொடர்ந்து பயன்படுத்திவருவதும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய ஜல்சக்தித்துறை இணைஅமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல்   தெரிவித்துள்ளார்.

 

SRI/PLM/RS/KRS

 


(Release ID: 1907777) Visitor Counter : 273


Read this release in: English , Odia , Telugu