குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம்

Posted On: 16 MAR 2023 2:21PM by PIB Chennai

தொழில்துறை இல்லாத பகுதிகளில் புதிய ஆலைகளை அமைப்பதற்கு தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், கதர் மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையம் மூலம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டத்தை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம் அமல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவைச் சேர்ந்த பயனாளிகள் கிராமப் பகுதிகளில் 25 சதவீத லாபத்தொகை மானியமும், நகர்ப்புற பகுதிகளில் 15 சதவீத மானியமும் பெறுவார்கள். ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவ வீர்ர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், வடகிழக்கு, மலைப்பிரதேச மற்றும் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த பயனாளிகள் மற்றும் முன்னோடி மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள், லாபத்தொகையில் கிராமப்புறங்களில் 35 சதவீதத்தையும், நகர்ப்புறங்களில் 25 சதவீதத்தையும் லாபத்தொகையை  மானியமாக பெறுவார்கள்.

இத்திட்டதின் கீழ் 2020-21-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 5,188 ஆலைகளுக்கு உதவி அளிக்கப்பட்டது. 13,881.57 லட்சம் ரூபாய் லாபத்தொகையாக வழங்கப்பட்டது. 41,504 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

2021-22-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 5,972 ஆலைகளுக்கு உதவி அளிக்கப்பட்டது. 16,445.76 லட்சம் ரூபாய் லாபத்தொகையாக வழங்கப்பட்டது. 47,776 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

2022-23-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வரை தமிழ்நாட்டில் 5,297 ஆலைகளுக்கு உதவி அளிக்கப்பட்டது. 15,847.98 லட்சம் ரூபாய் லாபத்தொகையாக வழங்கப்பட்டது. 42,376 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.

இத்தகவலை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் திரு பானு பிரதாப் சிங் வர்மா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

***

SRI/IR/RJ/KRS


(Release ID: 1907714)
Read this release in: English , Urdu , Manipuri